Thursday, January 15, 2009

பிரிவு ..


இந்த காரியங்களை இனி யார் செய்வார் என்ற கேள்வியை
மனதில் தேக்கியபடி மௌனித்திருக்கும் ஊர்...

55 ஆண்டுகள் அவரே உலகமென வாழ்ந்து இன்று அவர்

உலகை விட்டு போனபின் உண்மையை ச்ரமத்துடன் ஜீரணிக்க முயலும் அம்மா..

இத்தனை ஆண்டுகள் அவருடைய நிழலாக வாழ்ந்து இன்று நிஜம் போன பின்
தங்களுக்கான நிழல் குறித்த
நிஜமான அச்சங்களுடன் அவர் சகோதரர்கள்..

தாய்போல பாசத்தை காட்டிய தந்தையை இழந்த அக்காக்கள்..

இரண்டாம் முறையாக அப்பாவை இழந்த வருத்தத்தில் என் சித்திகள்...

அவருக்கு மகிழ்ச்சி கொடுக்க கூடிய காரியத்தையே இனி செய்வோம் என்ற வைராக்யத்துடன் மகன்கள்..

என்றோ தொலைத்த அப்பாவை இன்று தேடிக்கொண்டிருக்கும் நான்..

காரியம் முடிந்து ஊர் திரும்புகையில் திரும்பி பார்த்தேன்,
அடங்கிய புழுதியில் பேருந்து நிழல் குடையில் வாசகம்
உபயம்: N.R.கோபாலய்யர், லஷ்மி விலாஸ்.
வெயிலில் நான்..






2 comments:

  1. இது என் தாத்தாவிர்க்காக :

    "உங்களை தான் நான் முதலில் தாத்தா என்று கூப்பிட்டேன். நீங்கள் எனக்கு கற்று கொடுத்த பாடங்களில் சிலது என் வாழ்கையின் திசை திருப்பி விட்டது. உங்கள் சிரித்த முகவும் அளவில்லாத பாசவும் ஆசீர்வாதவும் என்னை நேர் வழி நடத்தும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை."

    நமக்கு பிரிவே கிடையாது, அல்லவா தாத்தா?

    ReplyDelete
  2. அண்ணா, என் ஆழ்ந்த அனுதாபங்கள்...

    ReplyDelete